கடலில் கரையும் பிளாஸ்டிக்கா? ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!
இப்போது ஜப்பானில் இருக்கும் விஞ்ஞானிகள் ஒரு புரட்சிகரமான பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துருக்கிறார்கள்
– இது கடல் தண்ணீரில் ஒரு சில மணி நேரத்கில் கரைந்து போயிவிடுது!
ஜப்பானில் உள்ள RIKEN சென்டர் ஃபார் எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள். புது வகை பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துருக்கிறார்கள்.
இது “சூப்பர்மாலிகுலர் பிளாஸ்டிக்”னு சொல்லப்படுது. கடல் தண்ணீரில் ஒரு சில மணி நேரத்தில் கரைந்து, எந்த மைக்ரோபிளாஸ்டிக்கையும் விடாமல் மறைந்து போய்விடும்.
இந்த பொருட்கள், “சால்ட் பிரிட்ஜஸ்”னு சொல்லப்படுற ஒரு வேதியியல் கட்டமைப்பு மூலமா இணைக்கப்பட்டு, பிளாஸ்டிக்குக்கு வலு கொடுக்குது. கட்டமைப்பு, கடல் தண்ணில இருக்குற உப்பு தொடும்போது ஒடைந்து, பிளாஸ்டிக் முழுசா கரைந்து போய்விடும்
இந்த பிளாஸ்டிக்கின் சிறப்பம்சங்கள்
வேகமா கரையும்: கடல் தண்ணியில் ஒரு மணி நேரத்துக்குள் கரைந்து போகும். மண்ணில் இருந்தால் 10 நாளில் முழுவதும் உடைந்து, மண்ணிற்குள் பாஸ்பரஸ், நைட்ரஜன் மாதிரி ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறதுது. இதனாலஇ மண் இன்னும் வளமாகிறதுது!
மைக்ரோபிளாஸ்டிக் இல்லை: வழக்கமான பிளாஸ்டிக், உடைற்கு மைக்ரோபிளாஸ்டிக்கா மாறி,கடல் உயிரினங்களையும், உணவுச் சங்கிலியையும் பாழாக்குகிறதுது. ஆனால்இ இந்த புது பிளாஸ்டிக் முழுதாக கரைந்துஇ எந்த தீங்கும் விடாமல்’ போய்விடும்.
ரீசைக்கிள் செய்யலாம்: இந்த பிளாஸ்டிக்கை கடல் தண்ணில கரைச்ச பிறகு, 91% ஹெக்ஸாமெட்டாபாஸ்பேட் மற்றும் 82% குவானிடினியம் தூளாகடி மீட்க முடியுது. இதனால், இதை மறுபயன்பாடு செய்யவும் முடியும்.
RIKEN சென்டரோட தலைமை ஆராய்ச்சியாளர் தாகுசோ ஐடா, இந்த “சூப்பர்மாலிகுலர் பிளாஸ்டிக்ஸ்” என ஒரு புது வகை பாலிமர்களை ஆராய்ந்து, இந்த பிளாஸ்டிக்கை உருவாக்கியிருக்கார்கள்.
இந்த ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான விடயம், “டிசால்டிங்”என்று சொல்லப்படும் ஒரு புராசஸ். புராசஸ் இல்லாமல், பிளாஸ்டிக் ஒரு உடையுற கிரிஸ்டல் மாதிரி ஆகிவிடும். ஆனால்இ உப்பு தண்ணில வைக்கும்போது, இந்த பிளாஸ்டிக் கட்டமைப்பு உடைந்து , சில மணி நேரத்தில் கரைந்து போய்விடுகிறது.
இதனால என்ன பயன்?
கடல் மாசு குறையும்: உலக கடல்களில் 150 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பை இருக்கிறகது என ஐநா சொல்றகிறது. இந்த புது பிளாஸ்டிக்இ மைக்ரோபிளாஸ்டிக் உருவாக்காம, கடல் மாசு பிரச்சனையை குறைக்க உதவும்.
இந்த பிளாஸ்டிக் இன்னும் வணிக பயன்பாட்டுக்கு தயாராகவில்லை. இந்த ஆராய்ச்சி பேக்கேஜிங் துறையில இருக்கும் பல பெரிய நிறுவனங்களோட கவனத்தை ஈர்த்திருக்கிறது. இப்போது விஞ்ஞானிகள், இந்த பிளாஸ்டிக்கை ஒரு கோட்டிங் முறையா உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இது வெற்றி பெற்றா, இந்த பிளாஸ்டிக்கை பல பொருட்களுக்கு பயன்படுத்த முடியும்.
பிளாஸ்டிக் மாசு பிரச்சனையை தீர்க்க, இதற்க்கு முன் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கிறது. உதாரணமாக, பாலிலாக்டிக் ஆசிட் (PLA) மாதிரி பயோடிகிரேடபிள் பிளாஸ்டிக்குகள் இருக்கு. இவை கடல் தண்ணீரில் கரையாது, மைக்ரோபிளாஸ்டிக்கா உடைஞ்சு பிரச்சனையை உருவாக்கும்.