போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல் : பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை!

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், தனக்கு இனந்தெரியாத நபர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது சேவை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தான் ஆலயத்திற்கு சென்று சில சேவைகளை முன்னெடுக்கவேண்டிய நிலை காணப்படுவதாகவும், ஆனால் இவ்வாறான அச்சுறுத்தலான சூழ்நிலையில் தனக்கு ஆலயத்திற்கு செல்லமுடியாமல் உள்ளதாகவும் குறித்த வேலைகளை மேற்பார்வை செய்து வழங்குவதற்கு சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.