இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : சாரதி உயிரிழப்பு, 22 பேர் காயம்!
மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில், தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.