கூலி படைத்த சாதனை

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

குறித்த திரைப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நேற்று வெளியானது.

இதற்கமைய அமெரிக்காவில் மிக வேகமாக 3 மில்லியன் டொலர்களை வசூலித்த தமிழ்த் திரைப்படம் என்ற அங்கீகாரத்தைக் கூலி கைப்பற்றியுள்ளது.

மேலும் உலகளவில் முதல் நாள் வசூல் 151 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி உலகளவில் அதிகம் வசூலித்த தமிழ்த் திரைப்படம் என்ற  வரலாற்றைக் கூலி திரைப்படம் படைத்துள்ளது.