
யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் வி.சுதர்சன் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.
