தெருநாய்கள் துரத்தினால் நாம் இதைத் தான் செய்ய வேண்டும்

வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் இருந்தே இன்று வரைக்கும்  நாய்கள் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. நாகரிக மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் பெருநகரங்களில் நாய்கள் தனித்து வளர வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

தெருநாய்கள் துரத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்,

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நாய் துரத்தினால் சற்று வேகமாகச் செல்ல வேண்டும். அப்போது நாய் நின்றுவிடும்.

நடந்து செல்லும் போது கைவசம் குச்சியோ அல்லது ஏதேனும் ஒரு பொருளோ இருப்பது உதவியாக இருக்கும். பெரும்பாலான நாய்கள் தாக்காது, அவை அச்சத்தை உண்டாக்கவே பார்க்கின்றன.

அத்துடன் நாம் சத்தம் எழுப்பினாலோ அல்லது ஏதாவது பொருளை எதிர்த்து காண்பித்து ஆதிக்கத்தை நிறுவினாலோ நாய்கள் பின்வாங்கி விடும்.

நாய் குரைப்பது அவை இயல்பாக இல்லை என்பதற்கான முதல் அறிகுறி நாம் இருக்கின்ற இடத்தில் சூழ்நிலை புரிந்து செயல்பட வேண்டும்.

குழந்தைகளை தனியாக விடக்கூடாது. பெரும்பாலான நாய்கள் தனியாக இருக்கும் குழந்தைகளைத் தான் தாக்குகின்றன.