“ஊடகங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என கோபப்பட்ட முன்னாள் அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று வியாழக்கிழமை காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், வஜிர அபேவர்தன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்தபோது, ஊடகவியலாளர்கள் அவரிடம் இந்த அழைப்பு, மோசடி தொடர்பானதா என்று கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த வஜிர அபேவர்தன, ஊடகவியலாளர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லையா? என்று குற்றம் சாட்டினார்.
அவரது வருகைகுறித்து ஊடகவியலாளர்கள் இரண்டு முறை அவரிடம் கேட்டபோதும், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
