Instagram-இல் Repost செய்யலாம்- புதிய Update

பதிவுகளை ரீபோஸ்ட் செய்யும் புதிய வசதிகளை இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பல புதிய அம்சங்கள் அப்டேட் ஆகியுள்ளதுடன் அதில் ரீல்ஸ் ரீபோஸ்ட்இ மேப்ஸ் மற்றும் பிரண்ட்ஸ் டப் போன்றவை அடங்கியுள்ளது இப்பொழுது X மற்றும் டிக்டாக் போல எந்த ஒரு ரீல் மற்றும் ரீல்ஸ் ரீபோஸ்ட் செய்யலாம்.

மேலும் இதை தவிர நீங்கள் உங்களின் நண்பர்களிடம் லொகேஷன் ஷேர் செய்வதன் மூலம் கூகுள் மேப்பை போல இன்ஸ்டாக்ராமில் உங்களின் லொகேஷன் அறிய முடியும்.

இதற்கு முன்பு வரை ரீல்ஸ்இ புகைப்படங்கள் ஆகியவற்றை பப்ளிக் அக்கவுண்டாக இருந்தால்இ அதை இன்பாக்ஸ் அல்லது ஸ்டோரியில் ஷேர் மட்டுமே செய்ய முடியும். ஆனால்இ இனி உங்களுடைய கிரிட்-ல் இடம்பெறும் வகையிலும்இ அதே சமயத்தில் அதை உருவாக்கியவரின் உரிமை பறிக்கப்படாத வகையிலும் ரீபோஸ்ட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

உங்களுடைய போஸ்ட் எத்தனை நபர்களால் ரீபோஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்பதன் எண்ணிக்கையும் போஸ்ட்-க்கு கீழே காட்டப்படும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பதிவு எந்தளவிற்கு மக்களை சென்றடைகிறது என்பதை புரிந்துகொள்ள இயலும்.