பிரபலமாகிவரும் LABUB பொம்மைகள்

லபூப் பொம்மைகள்.

குறிப்பாக “தி மான்ஸ்டர்ஸ்” தொடரில் உள்ள  ஹாங்காங்கைச் சேர்ந்த கேசிங் லுங் என்பவரால் உருவாக்கப்பட்டவை  தான்  ‘லபூப் பொம்மைகள்’

இந்த பொம்மைகள் முயல் போன்ற காதுகளையும் தனித்துவமான முகபாவனைகளையும் கொண்டவை.

பாப் மார்ட் நிறுவனத்துடன் இணைந்து, மர்மப் பெட்டிகளில் விற்கப்பட்டதால் அவை இணையத்தில் மிகவும் பிரபலமாயின.

நீளமான காதுகள், சுறா போன்ற பற்கள் மற்றும் வெவ்வேறு முகபாவனைகளைக் கொண்டவை.

இப் பொம்மைகளை மர்மப் பெட்டிகளில் விற்கத் தொடங்கியதனால்  இது வாங்குபவர்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் லபூப் பொம்மைகளின் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

பாப் மார்ட் கடைகளில் புதிய பொம்மைகள் வெளியாகும் போது, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு இவற்றின் விற்பனை அதிகரித்தது.

அத்தோடு லபூப் பொம்மைகள் இளைஞர்கள் மத்தியில்பெரும் கவனத்தை இர்த்துள்ளது.

இப் பொம்மைகளின் தனித்துவமான தோற்றமு  விற்கப்பட்டு முறையின் காரணமாக,  இணையத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் போலியான மற்றும் ஆபத்தான லபுபு பொம்மைகளும் சந்தையில் அதிகரித்து வருகின்றன என்றும் இவற்றில் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் லபுபு பொம்மைகள் களவாடப்படுவதும் அதிகரித்து வருகிறது.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் கடை ஒன்றில் 7000 டாலர் மதிப்புள்ள லபுபு பொம்மைகள் திருடப்பட்டு,

மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபடும் காட்சிகள்ளும் வெளியாகியுள்ளன. இவை உண்மை விலையை விட அதிக விலைக்கு இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.