அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் சுற்றுலா தென்னாபிரிக்க அணி 53 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டெவால்ட் ப்ரீவிஸ் ஆட்டமிழப்பின்றி 125 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் மற்றும் பென் ட்வார்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் டிம் டேவிட் 50 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் குவேனா மபகா மற்றும் கோர்பின் போஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.போட்டியின் சிறப்பாட்டக்காரராக டெவால்ட் ப்ரீவிஸ் தெரிவானார்.