கஞ்சாவைக் குறைந்த ஆபத்தான மருந்தாக மறுவகைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பரிசீலிணை
கஞ்சாவைக் குறைந்த ஆபத்தான மருந்தாக மறுவகைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் கஞ்சா தொடர்பான வணிகங்களின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
