சர்வதேச யானைகள் தினம்

சர்வதேச யானைகள் தினம்  இன்று செவ்வாய்க்கிழமை (12) கொண்டாடப்படுகிறது.

உலகளவில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச யானைகள் தினம் அறிவிக்கப்பட்டது.

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் August 12 ல் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம்

யானைகள் பாதுகாப்பு.

இன்று உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.

அதில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.

இத்தினமானது  ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார்.

இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது.

இந்த படம் 2012 இந்நாளில் வெளியானது. அதன் காரணமாகவே அன்றைய தினம் முதல் இன்று வரை ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.