மருந்துக்காக விற்பனையாகும் புலியின் சிறுநீர்
மருந்துக்காக புலியின் சிறுநீரை பொதுமக்கள் வாங்கிச் செல்லும் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதன் மூலம் மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் குணம் அடைவதாக சீனாவில் நம்பப்படுகிறது.
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் பிங்க்பெங்சியா என்ற உயிரியல் பூங்காவில் தான் புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்த தகவல்களை சீனாவின் பிரபல ஊடகமான சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கிறது.
புலியின் சிறுநீரை பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலி, சுளுக்கு மற்றும் தசை வலிகள் குணப்படுவதாக கூறப்படுகிறது.
சில நிபுணர்கள் இதனை குடிப்பதற்கும் பரிந்துரை செய்துள்ளார்கள். இருப்பினும் அதனால் அலர்ஜி ஏற்படும் என்றால் அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
எனினும் இதற்கு இடையே இந்த புலியின் சிறுநீர் சுகாதார தன்மை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
சில மருத்துவர்கள் இந்த புலியின் சிறுநீரை பயன்படுத்தி வைத்தியம் பார்ப்பது குறித்து எந்த தகவல்களும் சீன மருத்துவத்தில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.
மேலும் சீனாவுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இந்த புலியின் சிறுநீரை வாங்க வேண்டாம் என்றும் சில மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதற்கிடையே புலியின் சிறுநீரை விற்பனை செய்வதற்கு தங்களிடம் போதிய வணிக உரிமம் இருப்பதாக மிருக காட்சி சாலையின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
