உணவுப் பற்றாக்குறையால் தவித்த நாட்டின் இன்றைய வளர்ச்சி
கத்தார் இன்று உலகின் 2 வது பெரிய ஏற்றுமதி நாடாக உள்ளதென்பது நாமறிந்த விடயமாகும்.
அந்தவகையில், கத்தார் பாலைவன நிலமாக இருந்ததால் தொடக்கத்தில் அங்கு வாழ முடியாத சூழல் நிலவியது.
அங்கு வாழ்வதற்கு ஏற்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
இந்த நிலையில்இ 1939ம் ஆண்டில் “துகான்” என்ற பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவே அந்நாட்டின் திருப்புமுனையாக அமைந்தது.
இதை தொடர்ந்து கத்தார் இந்த வாய்ப்பை பயன்படுத்தி செல்வத்தை ஈன்றது.
இது நவீன நகரங்களை உருவாக்கவும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் உலகின் வளமான நாடுகளில் தன்னை சேர்த்துக் கொள்ளவும் பயன்பட்டது.
கத்தாரின் துகானில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டாலும் இரண்டாம் உலகப் போர் காரணமாக எண்ணெய் உற்பத்தி மெதுவாகவே இருந்தது.
அதன் பிறகு தான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்தது.
மேலும், இங்கு மால்கள்இ 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. கத்தார் 1971 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பொருளாதாரத்தில் 70% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவால்லானது.
கத்தார் உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு நாடாகும்.
அத்தோடு கத்தாரில் பள்ளிகள்இ கலாச்சார மையங்கள் மற்றும் இந்திய மளிகைக் கடைகள் உள்ளன.
ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை. ரமழான் மற்றும் ஈத் பண்டிகைகளுடன், தீபாவளி மற்றும் ஹோலி போன்ற தமிழ் பண்டிகைகளும் கத்தாரில் கொண்டாடப்படுகின்றன.
