நாட்டில் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழையுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என , வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்; என, திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும், மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.