‘கூலி’ திரைப்படத்தை வெளியிட தடை..!!

கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படம் எதிர்வரும்  14ம் திகதி வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை இணையதளங்களிலோ, கேபிள் டிவி நெட்வொர்களிலோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அதில், பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்திருப்பதாகவும், இணையதளங்களில் கூலி திரைப்படத்தை வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்றும், ஆகையால் சட்டவிடோதமாக கூலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் யார் யாருக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற பிரதிவாதிகளின் பட்டியலையும் நீதிமன்றத்தில் சமர்பித்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் , ராமமூர்த்தி முன்பு இன்ற விசாரணைக்கு வந்தது.

அப்போது, 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கும் , 5 கேபிள் டிவி நெட்வொர்க்குகளுக்கும் கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக படத்தை இணையதளங்களில் வெளியிட்டால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.