ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்
ரஷ்யாவின் செவெரோ-குரில்ஸ்க் நகரின் கிழக்கு தென்கிழக்கே 267 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று பதிவாகியிருக்கிறது.
இது ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.0 என பதிவாகியிருக்கிறது.
சில நட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதனால் ஜப்பான் மற்றும் ரஷ்ய கடலோரப் பகுதிகளில் பெரிய சுனாமி அலைகள் உருவாகியிருந்தன.
அதேபோல இந்த நிலநடுக்கமும் சுனாமி அலைகளை ஏற்படுத்துமா? என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.
நேற்றிரவு 7.30 மணியளவில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
