துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் தீயில் எரிந்து நாசம்!
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் தீயில் எரிந்து நாசம்!
காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலி மாநகர சபை தீயணைப்புப் பிரிவு, கடற்படை, காலி மாவட்ட பேரிடர் மேலாண்மைப் பிரிவு மற்றும் மீனவ சமூகத்தினருடன் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
துறைமுக வளாகத்தில் செயலற்ற நிலையில் இருந்த சுமார் நான்கு படகுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து காலி துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


