குழந்தைகளுக்கு பச்சைப்பால் கொடுப்பது ஆபத்து
குழந்தைகளுக்குக் பச்சை பால், அதாவது பேஸ்டுரைசேஷன் செய்யப்படாத பாலை கொடுப்பதால் பல்வேறு தீவிரமான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று குழந்தைநல மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பேஸ்டுரைஸ் செய்யும் செயல்முறை எதற்காக அவசியம் என்பதையும் குழற்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் பச்சைப் பாலை அதாவது பேஸ்டுரைசேஷன் செய்யப்படாத பாலை குழந்தைகளுக்குக் கொடுப்பது,
பல்வேறு தீவிரமான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று அதை எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழந்தைநல மற்றும்
மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பச்சைப் பாலும்இ பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலும் – வித்தியாசம் என்ன?
பச்சைப் பால் என்பது பசுவிடமிருந்து நேரடியாக கறக்கப்பட்ட எந்தவொரு சுத்திகரிப்பு செயல்முறைக்கும் உட்படுத்தப்படாத பால் எபதால்,
இதில் ஈ.கோலை, லிஸ்டெரியாஇ சால்மோனெல்லா, கேம்பிளோபேக்டர் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்.
பாலில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக ஆறு மாதங்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு பால் தான் பிரதான உணவாகும். ஆனால், அனைத்து பாலும் பாதுகாப்பானது இல்லை.
பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால் குறுகிய காலத்திற்கு அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படுவதால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.
இது பாலின் சுவையையோ, ஊட்டச்சத்துகளையோ பாதிக்காமல் பாதுகாப்பை உறுதி செய்யும்.
பச்சைப் பால் ஏன் ஆபத்தானது?
குழந்தைகள், பச்சைப் பாலை குடித்தால்,
- வயிற்றுப்போக்கு
- சிறுநீரக செயலிழப்பு
- மூளைக்காய்ச்சல்
போன்ற தீவிரமான தொற்றுநோய்களுக்கு ஆளாகலாம்” என்றும் டாக்டர் மோடி எச்சரிக்கிறார்.
அமெரிக்க சுகாதார நிறுவனங்களான சிடிசி மற்றும் எஃப்டிஏ வெளியிட்ட தரவுகளின் படி, 1998-2018 காலத்தில் பச்சைப் பால் குடிப்பதால் 202 தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்.
இதனால், 2,645 பேர் நோயாளிகளாக மாறவும் 228 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் வழிவகுத்தது என்று தெரிவித்துள்ளது.
சிறுவர் குழுவுக்கு அதிக ஆபத்தா?
ஐந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் இதனால் அதிக ஆபத்திற்குள்ளாகிறார்கள். காரணம், அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ந்திருக்காது. அத்துடன்
1. கர்ப்பிணிப் பெண்கள்
2. முதியவர்கள்
3.நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றவர்களும் பச்சைப் பாலை தவிர்க்க வேண்டும் என்பதுடன்,
அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
பெற்றோர் எப்படிப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்?
1. குழந்தைகளுக்கு எப்போதும், பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
2. பால் வாங்கும் போது, லேபிளில் “Pasteurized” என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
3. உள்ளூர் பண்ணையிலிருந்து பால் வாங்கினால்,அது சுத்திகரிக்கப்பட்டதா சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
4. வீட்டில் பாலை கையாளும் போது, சுத்தமான கொள்கலன்கள் கைகளை கழுவுவது போன்ற சிறிய நடவடிக்கைகளும் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பச்சைப் பால் ஒரு இயற்கையான தேர்வாகத் இந்தாலும் பாதுகாப்பு ரீதியாக அது மிகவும் ஆபத்தானது.
பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால் மற்றும் பச்சைப் பால் இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடு மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் பாதுகாப்பு தொடர்பான வேறுபாடு மிக அதிகம்.