பொருளாதார நன்மைகள் மக்களுக்கு தொடர்ந்து செல்வது உறுதி

கடந்த ஓராண்டு காலத்தில் அரசாங்கத்தின் மகத்தான அர்ப்பணிப்பின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையை எட்டியுள்ளது, மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார நன்மைகள் மக்களுக்கு தொடர்ந்து செல்வதை உறுதி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சிலர் எப்போதும் நாட்டில் பேரழிவு ஏற்படும் என நாசகார கனவு காண்கிறார்கள் என்றும் அது ஒருபோதும் நடக்காது என்றும், எனவே அவர்கள் வேறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பெறும் நோக்கில் எந்த வகையிலும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, நாட்டையும் மக்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களிலிருந்து விடுவித்து, மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க அனைவரும் நல்லெண்ணத்துடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.

சுமார் மூன்றரை இலட்சம் தொழிலாளர்களின் நேரடி வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் சற்று கடினமான தளத்தில் இருந்து நுழைகிறோம். அதன்படி, நாங்கள் மிகவும் வலுவான குழுவை பெயரிட்டோம்.

பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதன் மூலமோ அல்லது பட்டாசுகளை வெடிப்பதன் மூலமோ, கைதட்டுவதன் மூலமோ நாங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், இந்த ஆழமான நெருக்கடியின் தன்மையை நாங்கள் உணர்ந்தோம். எனவே, நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளை மிகச் சிறப்பாக நிறைவு செய்து, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினோம்.