
“வாலஸ் கட்டா” கைது
போதைப்பொருள் கடத்தல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகவான திலின சம்பத் என்கிற ‘வாலஸ் கட்டா’ மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் இன்று புதன்கிழமை கைது செய்யப்படடுள்ளார்.
இலங்கையில் கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை அவர் நடத்தி வந்துள்ளதாக தெரியவருகின்றது.
கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகவான ‘பாஸ் தேவா’ வெளிப்படுத்திய தகவலைத் தொடர்ந்து, ரூ. 5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கணேமுல்லவைச் சேர்ந்த 36 வயதான ‘வாலஸ் கட்டா’ சீதுவாவில் காரில் பயணித்தபோது கைது செய்யப்படடுள்ளார்.
