பேனா காணாமல் போனதற்காக ‘ஹரக் கட்டா’ காவல் அதிகாரியை மிரட்டுகிறார் புகார்

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளர், பேனா காணாமல் போனது தொடர்பாக, நன்கு அறியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்ரமரத்ன தன்னை வார்த்தைகளால் திட்டியதாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
மூத்த காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில், சிறைச்சாலை வளாகத்தில் ஒரு வழக்கமான சோதனையின் போது, ஒரு கார்பன் பேனா கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஹரக் கட்டா குளியலறையிலிருந்து திரும்பிய பின்னர் தனது குறித்த பேனா காணாமல் போனது தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு, ஒரு அதிகாரி பேனாவை எடுத்ததாக குற்றம் சாட்டினார். “நீங்கதான் என் பேனாவை எடுத்தீங்க. நான் வெளியே வந்ததும் என்ன நடக்கும் என்று கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்” என்று அவர் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தி கூறியதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவின் தங்காலை பிரிவில் இணைக்கப்பட்ட காவல் ஆய்வாளரான குறித்த அதிகாரி, தங்காலை பழைய சிறைச்சாலைக்கு சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் சந்தேக நபரால் வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறி, தங்காலை காவல் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளித்தார்.

உயர்மட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா, அவரது குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் காவலில் இருந்து தப்பிக்க முந்தைய முயற்சிகள் காரணமாக கடுமையான பாதுகாப்பில் இருக்கிறார்.