எல்லைத் தாண்டிய 4 இந்திய மீனவர்கள் கைது!
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் ஒரு மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மைலட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.