
சீனாவில் சிக்கன்குனியா – 8ஆயிரம் பேர் பாதிப்பு
சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் சுமார் 8 ஆயிரம் பேர் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நோய் பாதிப்பின் வேகம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 3ஆயிரம் புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்தெரிவித்துள்ளது .
இது மாகாண ரீதியில் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் கொண்டு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் சுமார் 12 நகரங்களும் தொற்றுநோயை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நோய் பரம்பலை விரைவாக கட்டுப்படுத்த வீடுகளுக்கருகில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 10ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
