பேருந்து முன்னுரிமை ஒழுங்குச் சட்டம் மீண்டும் அமுல்

கொழும்பில் பேருந்து முன்னுரிமை ஒழுங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – காலி வீதியில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி.வூட்லர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னோடித் திட்டமாகச் செயற்பட்ட போதும், பின்னர் அச்செயற்பாடு கைவிடப்பட்டிருந்த நிலையில் இத்திட்டம் மீண்டும் அமுலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.