ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் இம்மாதம் 14ம் திகதி திரைக்கு வரவுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளதுடன் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனாஇ சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான் மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் அண்மையில் ஆரம்பமானது.

இதற்கமைய முன்கூட்டிய ஆசன பதிவின் ஊடாக வட அமெரிக்காவில் 7 இலட்சத்து 50 ஆயிரம் டொலரும் அவுஸ்திரேலியாவில் ஒரு இலட்சம் டொலரும், பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் ஐந்து இலட்சம் டொலரும் வசூலாகியுள்ளது.

கூலி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.