அரசாங்கத்தை சாடும் நாமல்

மத ஸ்தலங்களுக்குள் அரசியலை புகுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இளைஞர் சங்கங்கள் மற்றும் கிராமத்திலுள்ள மரண சங்கங்களிலும் அரசாங்கம் தங்களின் அரசியலை புகுத்த அரச அதிகாரத்தை முழுமையாக பிரயோகித்துள்ளது என்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.