10ஆயிரம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களைசேவையில் இணைக்கநடவடிக்கை

பொலிஸ் திணைக்களத்துக்கு 10ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் .

இவற்றுக்கு மேலதிகமாக 5ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த ஆட்சேர்ப்புகள் தற்போது பொலிஸ் சேவையிலுள்ள சுமார் 10ஆயிரம் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஆனந்த விஜேயபால குறிப்பிட்டார்.