
பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார்
இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
