இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு!

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைத்தீவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்க மாலைத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த விசாவைப் பெற, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருப்பதும், மாலைத்தீவில் நீங்கள் தங்கியிருக்கும் போது உங்கள் செலவுகளை ஈடுகட்ட போதுமான நிதி உங்களிடம் இருப்பதை நிரூபிப்பது மட்டுமே அவசியமானதாகும்.

மாலைத்தீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசா வசதி ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைத்தீவின் குடியேற்றச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த விசா வசதி வழங்கப்படுவதாக மாலைத்தீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.