கல்லீரலில் வளரும் கரு

உத்தரப் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவருக்குக் கர்ப்பப்பைக்குப் பதிலாகக் கல்லீரலில் கரு வளரும் அரிதான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கர்ப்பப்பை அல்லாது, மற்றைய உடல் உறுப்புக்களில் கரு வளர்வது, எக்டோபிக் கர்ப்பம் என அழைக்கப்படுகின்றது.

இந்தியாவில் முதல் சம்பவம் இது என்று பதிவானாலும், உலகளாவிய ரீதியில் இதுவரை 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுவாக ஃபலோபியன் குழாய்களில் உருவாகும் கர்ப்பமே, எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

எனினும், ஒரு முட்டை ஃபலோபியன் குழாய்களில் சிக்கிக் கொண்டால், அது ஒரு குழந்தையாக வளராது எனவும், இவ்வாறான கர்ப்பம் தொடர்ந்தால், உடல்நலம் ஆபத்திற்கு உட்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கப்படுகின்றன.