இத்தாலி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து

வடக்கு பகுதியிலுள்ள ப்ரெஷியா நகரத்தில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிவிபத்துக்குள்ளாகியுள்ளது .

இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் மற்றும் அவரது 60 வயதான தோழி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர் .

நெடுஞ்சாலையில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது, இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது .

இந்த விபத்தைப் பதிவு செய்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்களும் தீயில் சிக்கி எரிந்துள்ளன . அதில் இரண்டு சாரதிகள் காயமடைந்தனர்.

விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது .