போலி யுவான் நாணயத்தாள்கள், இரத்தினக் கற்களுடன் இருவர் கைது
இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் , போலி இரத்தினக் கற்கள் தொடர்பான இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் 4ஆயிரம் போலி 100 யுவான் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய சீன பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களை வைத்திருந்த 52 வயதுடைய சீன பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து மடிக்கணினி, ஐபேட் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.