கொட்டாஞ்சேனை நபர் கொலை ஐவர் கைது
ஹோமாகம பைபாஸ் சாலையில் கடந்த ஜூலை 10ஆம் திகதி வீதியில் விசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஒருவரின் கொலை தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 13 சேர்ந்தவர் கழுத்தை பிடித்து தலையில் பலவந்தமாக தாக்கி கொலை செய்யப்பட்டதாக;; விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையைத் தொடர்ந்து, நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு ரம்புக்கன-கேகாலை சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு உடலை கொண்டு செல்லப்பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடித்தது.
கொலை செய்யப்பட்டவரை கொண்டு சென்ற ஒரு சந்தேக நபர்இ குற்றம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மாவனெல்லையில் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு 14, 15 பகுதிகளை சேர்ந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் ஜூலை 25 ஆம் திகதி இரவு கிராண்ட்பாஸ் மற்றும் மாதம்பிட்டிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ஹோமாகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.