அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின், வொஷிங்டனில் உள்ள கிர்க்லேண்ட் (Kirkland) பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) பகுதியில், வாகனம் ஒன்று பெரிய கூட்டத்திற்குள் புகுந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பொலிஸார் தேடி வருவதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு, மக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
