திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு!

 

-கிண்ணியா நிருபர்-

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை திருகோணமலை புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தலைவராக தர்மலிங்கம் ஸ்ரீதரன், செயலாளராக அரசரெத்தினம் அச்சுதன், பெருளாளர் க.வரதகுமார், உபதலைவர் கி.விஜயராணி, உபசெயலாளர் ச.யுவராசா. ஆலோசகர்களாக அருட்பணி. சிறி யூட்வினோதன், த.நிர்மலானந்த குருக்கள், A.M.நஜாத், M.A.M.முனாஸ், திருமதி K. சந்திரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சந்தியா குனவர்த்தன உட்பட பலர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.