
பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது!
நாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரை இன்று வியாழக்கிழமை காலை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
நாராஹென்பிட்ட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 250 மில்லியன் பெறுமதியுடைய அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.
இதன்போது, 40 மற்றும் 50 வயதான மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த பறவைகள் சரணாலயத்தின் முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
