கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி நகை கொள்ளை : கொள்ளையர்களை துரத்தி பிடித்த கிராம மக்கள்!

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து, தங்க சங்கிலியை பறிமுதல் செய்த
கொள்ளையர்கள் இருவரை, ஊர்மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

முல்லைத்தீவு – முள்ளியவளை, பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில், வீதியால் பயணித்தபோது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்னை வழிமறித்து, கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்த, 32, 22 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை இம் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.