
அஸ்வெசும கொடுப்பனவுக்காக மக்கள் வரிசையில் காத்திருப்பு
அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அஸ்வெசும தொகையை பெற்றுக் கொள்வதற்காக கடந்த நான்கு மாதங்களாக காத்திருந்ததாகவும் இதனால் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் வரிசையில் காத்திருந்த அஸ்வெசும பயனாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
