மகேஷி விஜேரத்னவுக்கு பிணை!

அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயணத் தடை உள்ளிட்ட கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.