திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கூடம் திறந்து வைப்பு..!
அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் (14) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி. சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை சுகாதார பணிமனையின் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் சட்டத்தரணி கே.ஜெகசுதன் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.