ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் திருகோணமலை மாவட்ட குழு தெரிவு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் மாவட்ட கூட்டம் தலைவர் தோழர். இராஜேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் ஆகியோரினின் தலைமையில் திருகோணமலை – உப்பு வெளி சுவர்க்கா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் நிருவாக செயலாளராக திருகோணமலை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.ஜெயப்பிரகாஷ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து கட்சியின் மாவட்ட குழு தெரிவு செய்யப்பட்டது
திருகோணமலை மாவட்ட குழு தலைவராக ஈரோஸ் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் நாதன், செயலாளராக திருமதி சந்திரா, பொருளாளராக திரு. ஜெயஸ்கரன் தெரிவு செய்யப்பட்டனர்