அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு மற்றும் முதலுதவி பயிற்சி!

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில் தீயணைப்பு மற்றும் முதலுதவி தொடர்பான கற்கை நெறியும், பயிற்சி நெறியும் வழங்கப்பட்டதுடன், அக்கரைப்பற்று நீர் பூங்காவில் தீயணைப்பு பயிற்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எச்.ஜெயினுடீனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு வளவாளராக கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரி கே.எம்.றுமி, அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரி ஜே.றிஸ்வான் ஆகியோரினால் தீயணைப்பு தொடர்பான பயிற்சியும், முதலுதவி பயிற்றுவிப்பாளர் கே.டி.ரோகினியால் முதலுதவி கற்கை நெறியும் பயிற்சி நெறியும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.