
திருகோணமலை மாநகர முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு
திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் க. செல்வராஜா (சுப்ரா) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என்.தலங்கம ஆகியோரை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இதன்போது மாநகரத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது நினைவு சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.
