
அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு பயிற்சி!
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில் தீயணைப்பு தொடர்பான கற்கை நெறியும் அக்கரைப்பற்று நீர் பூங்காவில் பயிற்சி நெறியும் நடைபெற்றது.
இந்நிகழ்வினை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு வளவாளராக கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரி கே.எம்.றுமி, அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரி ஜே.றிஸ்வான் ஆகியோரினால் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயை கட்டுப்படுத்தும் கருவிகளை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான பயிற்சிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




