பல லட்சம் கடன் : பாரிய நிதி நெருக்கடியில் கிண்ணியா நகர சபை!

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவானது கடந்த ஜீன் 17 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில், கிண்ணியா நகர சபையில், கழிவகற்றல், மின் குமிழ்களை பழுது பார்த்தல், கான்களை துப்பரவு செய்தல் போன்ற பிரதான பணிகள் கூட மிகவும் மந்த கதியிலேயே நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சுமார் 38 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கடன் சுமையோடு தான் புதிய தவிசாளர் எம.எம்.மஹ்தி தலைமையிலான புதிய சபை பொறுப்புகளை சுமந்திருப்பதாக, சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.