
பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேகம்
பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய பஞ்ச குண்ட பக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6மணி 59 நிமிடம் முதல் 7 மணி 59 நிமிடம் வரையுள்ள சுக்கிரன் கால ஓரயும் திருதியை திதியும் திருவோண நட்சத்திரமும் பிரீத்தி யோகமும் வணிசை கரணமும் கூடிய கடக லக்கின வேளையில் நடைபெறவுள்ளது.
கர்மாரம்பம் இன்று 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் ஆரம்பமாகி 12 ஆம் திகதி சனிக்கிழமை பெருமானுக்கு பால்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று மறுநாள் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 24 ஆம் திகதி சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
