
தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி 27 ஆண்டுகளுப்பின் கைது!
இந்தியா – கோவையில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
1998ம் ஆண்டு கோவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரசார மேடைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
அதனை தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகயிருந்தன.
அதில், 58 பேர் கொல்லப்பட்டதுடன், 231 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்
நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர காவல்துறையினரிடம்; இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிரதான சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்தனர்
இந்தநிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான டெய்லர் ராஜா என்பவர் 27 வருடங்களுக்கு பின்னர் இன்று கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.