நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு!

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார்.

அத்துடன்,இந்தச் சம்பவத்தில் யாருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.