பால்தேநீரின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பால்தேநீரின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.